‘‘நீட் தேர்வுக்கு தயாராகி வந்தவர்’’
ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மாணவியின் இரு கால்கள் துண்டானது:
நெல்லையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றபோது கால்கள் துண்டானது. நெல்லை, மீனாட்சிபுரம் புளியந்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (49). அரசு ஒப்பந்ததாரர். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர்களது மகள் கோமதி வசுந்தரா (18) நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
நேற்றிரவு கோமதி வசுந்தரா வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அங்கிருந்து சிவபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே கோமதி வசுந்தரா சென்றபோது அந்த வழியாக சென்ற ரயிலில் திடீரென பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ரயிலில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை மீட்டு அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் மாணவிக்கு இரண்டு கால்கள் துண்டான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது சோகத்தை ஏற்படுத்தியது.