திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இதுவரை எட்டிப்பார்த்தாரா? தேர்தல் வந்துவிட்டதால் பிரதமர் மோடி தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்
தமிழகத்தை இதுவரை எட்டிப்பார்த்தாரா? வந்தாரா?, தேர்தல் வந்துவிட்டதால் தமிழகத்தை சுற்றி, சுற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ேபசினார்.திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நேற்று மாலை திருப்பத்தூர் பாய்ச்சல் மேம்பாலம் அருகே தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து கலைஞரின் பேரன் வாக்கு கேட்க வந்துள்ளேன். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள் அதேபோல இந்த பாராளுமன்ற தேர்தலில் எத்தனை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்கள் என்று மக்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்றனர்.