சுவாமி விபுலாநந்தரின் 132 வது ஜனன தினம் இன்று…!

சுவாமி விபுலாநந்தர் ..தோற்றம்:
மார்ச் 27, 1892 .மறைவு  ஜூலை 19, 1947.இவர்  கிழக்கிலங்கையின் 
காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர்
 மயில்வாகனன் ஆகும். இவர் சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்.
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 சூலை 19-ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது.

எஸ்ஜிஎஸ் கம்பளை.

Leave a Reply

Your email address will not be published.