ஸ்ரீகாளஹஸ்தியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ராஜஸ்தானை சேர்ந்த பெண்கள் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் உள்ள ஜெயின் கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடினர். கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கினர்.
மேலும் அவரவர் அருகில் உள்ள ஆறு மற்றும் குளங்களின் அருகில் சென்று தீபாராதனை காட்டியும் அவரவர் பகுதிகளில் பெண்கள் நடனமாடி ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக்கொண்டும், வீசிக்கொண்டும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதுகுறித்து ராஜஸ்தான் பெண்கள் கூறுகையில், ‘இன்று எங்களுக்கு மிகப்பெரிய பண்டிகை. இந்த ஹோலி பண்டிகை ராஜஸ்தானில் மிக பிரமாண்டமாக நடத்தப்படும்’ என்றனர்.