மே 26ம் தேதி சென்னையில் ஐபிஎல் பைனல்
ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் இறுதிப் போட்டி, சென்னையில் மே 26ம் தேதி நடைபெற உள்ளது. நடப்பு தொடருக்கான முதல் கட்ட அட்டவணை ஏற்கனவே வெளியாகி போட்டிகள் நடந்து வருகின்றன. மார்ச் 22 முதல் ஏப். 7ம் தேதி வரை 21 லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2ம் கட்ட அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
லீக் சுற்று மே 19ம் தேதியுடன் நிறைவடைகிறது (70 ஆட்டங்கள்). பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்திலும் (மே 21, 22), குவாலிபயர் 2 மற்றும் பைனல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கிலும் (மே 24, மே 26) நடைபெற உள்ளன. சென்னையில் ஏற்கனவே 2011, 2012ல் ஐபிஎல் பைனல் நடந்துள்ளது. தற்போது 3வது முறையாக இறுதிப் போட்டி நடக்க உள்ளது.