தமிழக உள்துறை செயலாளர் அமுதா
பண்ணாரி அம்மன் கோயிலில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார் தமிழக உள்துறை செயலாளர் அமுதா
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
முன்னதாக, தீக்குழி முன் சிறப்பு பூஜை செய்து பூசாரி பார்த்திபன் பய பக்தியுடன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் குண்டம் இறங்கினர். பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்