அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஏராளமான கார்கள் படப்ஸ்கோ ஆற்றுக்குள் விழுந்தன. ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.