ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
இந்த அழகான ஹோலி பண்டிகையில் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வண்ணங்களும் இருக்க வாழ்த்துக்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகையாகும். பனி காலத்திற்கு விடையளித்து வெயில் காலத்திற்கு வரவேற்பளிக்கும் காலத்தில் ஹோலி கொண்டாடப்பட்டு வருகிறது. பனி காலத்திலிருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்பர்.
இந்த வசந்த காலத்தில் நச்சுயிரி சார்ந்த காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை ஏறிந்து விளையாடுகின்றனர். வட மாநிலங்களில் வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.