பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் தேவாலயங்களில் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.
லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை. பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து. பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ அவர்கள் தலைமையில் குருத்தோலையை மந்திரித்து, ஜெபம் செய்து பின்னர் இறை மக்கள் கையில் பிடித்தவாறு ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.
இதைப்போல் பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.