நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் முறையாக தண்ணீர் குடிப்பதில்லை. ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது மிகவும் அவசியம். ஆனால், எவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதில்லை. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் கொடுப்பதை தான் பலபேர் வழக்கமாக வைத்து கொள்கிறார்கள். ஆனால், இது மிகவும் தவறான ஒன்று.

தண்ணீர் குடிப்பதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன்படியே தண்ணீர் குடிக்கவேண்டும். அதாவது, தண்ணீரை வாய்வைத்து தான் குடிக்க வேண்டும். இதுதான் தண்ணீரை குடிப்பதற்கு சரியான முறை. அதேபோல், தண்ணீரை நின்றுகொண்டு குடிக்கக்கூடாது. அப்படி நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

அஜீரண கோளாறு:

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மண்டலம் பாதிக்கப்படும். அதாவது, நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, ​​அதிக வேகத்துடனும் தண்ணீர் நேரடியாக கீழ் வயிற்றில் விழுவதால், அஜீரண கோளாறு பாதிக்கப்படும். மேலும், நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் நரம்புகள் பதற்றமடைகிறது.

மூட்டுவலி:

நின்றுகொண்டே தண்ணீர் அருந்துவதால், நரம்புகள் பதற்றமடைந்து திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. மூட்டுகளில் அதிக திரவங்கள் தேங்கி கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.