தூத்துக்குடிக்கு உங்கள் அன்பை தேடி மீண்டும் வந்திருக்கிறேன்
பிரசாரத்தில் கனிமொழி எம்பி உருக்கம்
தூத்துக்குடி : 5 ஆண்டு காலம் உங்களுக்காக பணியாற்றி மீண்டும் உங்கள் ஆதரவை, அன்பை தேடி வந்திருக்கிறேன் என்று தூத்துக்குடி தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி உருக்கமாக பேசினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரசார பயணத்தை தொடங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கரும்பன், வி.சி.க. மாவட்ட செயலாளர் கணேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மக்கள் நீதிமய்யம் மாவட்டச்செயலாளர் ஜவஹர், மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அகமதுஇக்பால், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச்செயலாளர் நம்பிராஜ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்றார்.