சீரகத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா
செரிமான பிரச்சனை:
சீரகமானது செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தருகிறது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் 1 தேக்கரண்டி சீரகத்தை 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீரானது கொதித்து 1/2 டம்ளர் ஆனதும் குடிக்க வேண்டும். இராஜை குடிப்பதால் செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பசியின்மை பிரச்சனை இருக்கும். அவர்களுக்கும் இந்த தண்ணீரை குடிப்பதால் நன்றாக பசிக்க ஆரம்பிக்கும்.
மாதவிடாய் வலி:
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்வதற்கு சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
இதற்கு நீங்கள் சீரகத்தை வருது பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு வெல்லம் தூளாக அடித்து கொள்ள வேண்டும். இதில் சீராக பொடி இரண்டையும் மாத்திரை அளவிற்கு எடுத்து மாதவிடாய் வருவதற்கு 2 நாட்களுக்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் வயிற்று வலி வராமல் இருக்கும்.