சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவத்தை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. பொது தீட்சிதர்களின் பாரபட்ச போக்கால் 50 ஆண்டாக பிரமோற்சவம் நடத்தப்படவில்லை என ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார். பொது தீட்சிதர் குழு ஏப்ரல்.24-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று இறுதிக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.