ஒரே நாளில் வேண்டுதல் நிறைவேற விளக்கு பரிகாரம்
நினைத்த மார்க்கத்தில் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல், சிரமப்படாமல் நாம் வேண்டியதை அடைந்து விட்டால் அதன் மீது நமக்கு ஒரு அக்கறை இருக்காது. நமக்கு கிடைத்த விஷயத்தை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள மாட்டோம். கொஞ்சம் போராட்டம், கொஞ்சம் துன்பம், கொஞ்சம் துயரம், கொஞ்சம் முயற்சி, இவைகளோடு சேர்ந்து கிடைக்கக் கூடிய வெற்றிதான் நம்மிடம் நிலையாக தங்கும். ஆகவே எந்த சூழ்நிலையிலும் சுலபமாக கிடைக்கிறதே என்பதற்காக கஷ்டப்படாமல் எதையும் அடைய நினைக்காதீர்கள். இதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சரி என்னதான் சொன்னாலும் ஒரே நாளில் வேண்டுதல் பலிப்பதற்கு ஒரு வழிபாடு நமக்குத் தெரிந்தால் அது எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும்.
ஒரே நாளில் வேண்டுதல் நிறைவேற பரிகாரம் ஒரே நாளில் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் கரி நாளில் பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு போட்டு பிரார்த்தனை செய்யணும். கேலண்டரில் பார்த்தால் தெரியும் கரிநாள் என்னைக்கு வரும்னு. பொதுவாக இந்த கரிநாளில் எந்த நல்லதும் செய்ய மாட்டாங்க. அதாவது விசேஷ நாட்களை இந்த நாளில் குறிக்க மாட்டாங்க.
இந்த கரிநாள், கருப்பண்ணசாமி, காளி, அங்காள பரமேஸ்வரி, முனீஸ்வரன் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. கரிநாள் அன்று அதிகாலை வேலையிலேயே சுத்த பத்தமாக எழுந்து குளித்துவிட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும். கருப்பு நிறத்தில் இருக்கும் திராட்சை பழத்தை பிரசாதமாக வைக்க வேண்டும். முந்தைய நாள் இரவே வாங்கிட்டு வந்து வச்சுக்கோங்க. ஒருவேளை உங்களுக்கு இந்த கருப்பு திராட்சை பழமாக கிடைக்கவில்லை என்றால், கருப்பு நிறத்தில் உலர் திராட்சைகள் கிடைக்கும். அதை வாங்கியும் நிவேதினம் வைக்கலாம். கரிநாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு போட்டு கருப்பு திராட்சையை நிவேதியமாக வைத்து இறைவனிடம் நீங்கள் செய்யும் சங்கல்பம் உடனே பலிக்கும். இது நம்ப முடியாத அரிய தகவலாக இருக்கலாம்.