எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையேதான் – திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டுள்ளார். அதை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டுங்கள்.
விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. இல்லையெனில், ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். ஆனால், திமுக அப்படியல்ல. குடும்பத்திற்காக பாடுபடும்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
திமுக அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிமுக அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.