இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் 71 பணியிடங்கள்
இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 71 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இஸ்ரோ வேலை வாய்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் ஆராய்ச்சி விஞ்ஞானி, திட்ட அறிவியலாளர் மற்றும் திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 71 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2024
Research Scientist
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி :
M.Sc in Geology / Applied Geology – 3
M.E / M.Tech in Remote Sensing & GIS / Geoinformatics – 14
M.Sc Botany/ Forestry / Ecology/ Ecology and Environmental sciences – 1
M.E/M.Tech in Civil Engineering with Specialization in Water Resources/ Hydrology/ Irrigation Water Management – 2
வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 56,100
Project Scientist-I
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி : M.E / M.Tech in Remote Sensing & GIS / Geoinformatics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 56,100
Project Scientist-B
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி : B.E/B.Tech in Computer Science Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 56,100
Project Associate-I
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி : M.Sc in Remote Sensing / GIS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 31,000
Project Associate-II
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி : M.E / M.Tech in Geoinformatics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 35,000
Junior Research Fellow (JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை: 27
கல்வித் தகுதி :
M.E./ M.Tech in Civil Engineering – 1
M.E / M.Tech in Remote Sensing & GIS / Geoinformatics – 1
M.Sc in Atmospheric Sciences – 7
M.Sc. in Oceanography – 6
M.E./M.Tech in Atmospheric Sciences/ Chemistry/ Earth System Science – 1
M.Sc in Atmospheric Sciences/ Meteorology – 1
M.Sc in Agrometeorology – 1
M.E./M.Tech in Atmospheric Sciences – 3
M.Sc in Climate Science/Physics/Atmospheric Science/Physical Oceanography/Geophysics – 3
M.Sc in Physics/ Meteorology/ Atmospheric Sciences – 1
M.Sc in Physics/ Meteorology – 1
M.E./M.Tech in Atmospheric Sciences /Chemical Engineering/Meteorology – 1
வயதுத் தகுதி: 08.04.2024 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 37,000 – 42,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apps.nrsc.gov.in/eRecruitment_NRSC/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/NRSCRMT2_2024dated18_03_2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.