பாஜக மேலிடம் அதிர்ச்சி
மக்களவை தேர்தலில் 2 பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்து போட்டியிலியிருந்து விலகுவதால் அக்கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் குஜராத் பாஜக வேட்பாளரான பிகாஜி தாகூர் போட்டியிட மறுத்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபர்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளராக பிகாஜி தாகூர் அறிவிக்கப்பட்டிருந்தார். கவுதம் காம்பீர், ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோரை தொடர்ந்து குஜராத் பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூரும் தேர்தலில் இருந்து விலகினார்.
குஜராத் சபர்கந்தா பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் விலகியதை தொடர்ந்து மேலும் ஒரு வேட்பாளர் விலகினார். வதோதரா பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் தனஞ்ஜெய் பட் விலகுவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தான் போட்டியிலிருந்து விலகுவதாக பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் விளக்கம் அளித்துள்ளார். பாஜக ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்திலேயே 2 வேட்பாளர்கள் அடுத்தடுத்து விலகியதால் அக்கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.