கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில்
கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?என்று தெரிந்து கொள்ளலாமா?
சமீபத்திய ஆராய்ச்சியின்படி, ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் அல்லது சுமார் இரண்டு லிட்டர் தண்ணீர் என்பதே, நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதற்கு அதிகமான அளவாகும். எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு 1.5 முதல் 1.8 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பநிலை மற்றும் உடலுழைப்புக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல்களிலும், அதிக உயரத்திலும் வசிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், மற்றவர்களை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயது வந்தோர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதில் பழங்கள் மற்றும் காய்கறிகள், காஃபி உள்ளிட்டவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.