CSK vs RCB
ஐபிஎல் 17ஆவது சீசனின் முதல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெஙுகளூர் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன.
நடப்பு சாம்பியன்:
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் எதிர்பார்க்காத அளவுக்கு அபாரமாக செயல்பட்டு கோப்பையை தட்டித்தூக்கி அசத்தியது.
தற்போது:
தற்போது, 17ஆவது சீசனில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில், ஆர்சிபி அணியை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. இப்போட்டி இரவு 7:30 மணிக்கு துவங்கும்.
2008-ல் தான்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடைசியாக சேப்பாக்கத்தில் வெற்றியைப் பெற்றது, 2008ஆம் ஆண்டில் தான். அதன்பிறகு, சேப்பாக்கத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றியைப் பெறவில்லை. 16 வருசமாக இங்கு வெற்றியைப் பெறாத, ஐபிஎல் அணியாக ஆர்சிபி இருக்கிறது.
கடைசியாக:
ஆர்சிபி அணி, கடைசியாக இங்கு 2019ஆம் ஆண்டில்தான் விளையாடியது. அப்போது, படுமோசமாக சொதப்பி, வெறும் 70 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இம்முறை ஆர்சிபி அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
2010 முதல் 2019 வரை:
சென்னை சேப்பாக்கத்தில், ஆர்சிபி அணி 7 முறை விளையாடி உள்ளது. 2008-ல் ஆர்சிபி இங்கு வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்து 2010, 2011, 2012, 2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் இங்கு தோல்வியைதான் சந்தித்தது.
காரணம் என்ன?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஸ்பின்னர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சிஎஸ்கேவில், ஆரம்ப காலத்தில் இருந்தே, வலிமையான சுழற்பந்து வீச்சு அட்டாக் இருக்கிறது. மேலும், இது ஸ்லோ விக்கெட் என்பதால், இங்கு ரெகுலராக விளையாடினால்தான், பிட்சை புரிந்துகொள்ள முடியும். இதனால்தான், எப்போதுமே, சிஎஸ்கே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.
சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்:
தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷ்ஷாந்த் சிங், , மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.