தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் இனி ரேணிகுண்டாவிலேயே நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டாவிலேயே நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் இருந்துதான் அதிக பக்தர்கள் செல்கின்றனர். பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில் பயணங்களின் மூலம் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் ரயில் நிலையங்ககளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக அவ்வப்போது பயணிகள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சென்னை, விழுப்புரம், மன்னார்குடி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதி புறப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிப்ரவரி 2025க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவரை திருப்பதி நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் ரேணிகுண்டா ஸ்டேஷனிலேயே நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக தற்போதுள்ள நிலைய கட்டிடத்தில் புதிய நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.