அதிமுகவின் தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.

நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை.

ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.

குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published.