ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு
தமிழர்களிடம் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு!
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை தொடர்புப்படுத்திப் பேசியதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே!
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்த நிலையில், தமது கருத்தை திரும்பப்பெறுவதாக X தளத்தில் பதிவு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.