வாழ்க வளமுடன்! நலமுடன்!
அடிக்கடி கடந்த காலத்திலிருந்து நம்மைக் காயப்படுத்தும் சிலவற்றைச் சுமந்து செல்கிறோம். உங்களின் தற்போதைய மகிழ்ச்சியை கடந்தகால வலிகள் கொள்ளை கொண்டு போக அனுமதிக்காதீர்கள். கடந்த காலத்தில் வாழ்ந்திருந்தேயாக வேண்டும், அது மாற்றப்பட முடியாதது, ஆனால் இன்று வாழும் வாழ்வை உங்கள் மனதில் வைத்திருந்தால், மன்னித்து மறந்து, போக விட்டு, சுதந்திரமாக இருங்கள்.”
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவர் அடுத்த பிறவியில் ஈனப் பிறவியாகப் பிறப்பார்.
- வாரியார் சுவாமிகள்.
அடுத்தவர்களை ஏமாற்றிப் பெறும் எந்த ஒரு பொருளும் அவ்வளவு எளிதில் நிலைப்பதில்லை. அது பாசமாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி.
முகத்திற்கு முன்னால் பாசத்தைக் காட்டி, முதுகுக்குப் பின்னால் வேஷத்தை காட்டும் உலகம் இது. யாரையும் நம்பி பயணம் செய்யாதீர்கள்.
நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் ஏமாற்றி விடலாம் ஆனால் மனச்சாட்சியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அது குத்திக்கொண்டிருக்கும் வலிக்கு நீங்கள் எங்கு சுற்றினாலும் மருந்து கிடைக்காது.