ரத்தத்தில் யூரிக் அமிலத்தை குறைக்கணும்னா
யூரிக் அமிலம் (uric acid) நம்முடைய ரத்தத்தில் இருக்கும் ஒருவகை கழிவுப் பொருள் என்று சொல்லலாம். இதை வடிகட்டி வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் தான் செய்கின்றன. இந்த யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது அதை முழுமையாக வெளியேற்ற சிறுநீரகங்கள் கஷ்டப்பட்டு, பழுதாகின்றன. அதனால் தான் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை கட்டுப்படுத்த நம்முடைய உணவுமுறையும் முக்கியக் காரணம். என்ன மாதிரியான உணவுமுறையை பின்பற்றினால் யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் என்று இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
நம்முடைய உடலில் உள்ள பியூரின் என்னும் ரசாயனங்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாவது தான் யூரிக் அமிலம். இப்படி உற்பத்தியாகும் அமிலம் ரத்தத்தில் கலந்து, சிறுநிரகங்களின் வழியாக சுத்திகரிக்கப்பட்டு சிறுநீராக வெளியேறும். யூரிக் அமிலம் அதிகமாகும் போது, உண்டாகும் நிலையை ஹைபர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க சர்க்கரை சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளை சர்க்கரை மட்டுமின்றி ஃப்ரக்டோஸ் சர்க்கரை அதிகமுள்ள பழங்களையும் சாப்பிடுவதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துங்கள்.