புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார்
புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார் தமிழிசை செளந்தரராஜன்.
துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை புறப்பட்டார், அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர்.
ஆளுநர் மாளிகையில் தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர், மேலும் ஆளுநர் மாளிகையை நோக்கி கைகூப்பி வணங்கி விடைபெற்றார்