திமுக கூட்டணி வேட்பாளர்
8 ஆண்டுக்கு முந்தைய பேச்சு – சர்ச்சையில் சிக்கிய திமுக கூட்டணி வேட்பாளர்!
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் சூர்ய மூர்த்தி 8 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆணவ கொலைக்கு ஆதரவாகவும், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சமூக பெண்களை திருமணம் செய்தால் அறிவுறுத்துவோம் – இல்லை என்றால் இருவரையும் கொலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார். அந்த வீடியோவில் உளவுத்துறைக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன் என்று குறிப்பிட்டு பேசியுள்ள சூர்யமூர்த்தி மீது அன்றைய காலகட்டத்தில் இருந்த அதிமுக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பேசிய சூரியமூர்த்தியை மாற்ற பலரும் கோரிக்