உடலுறுப்பை போல வாயையும் டீடாக்ஸ் பண்றது ரொம் முக்கியம்

டீடாக்ஸ் என்றாலே அது குடல், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்வது, கழிவுகளை வெளியேற்றுவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய உடலில் தோல் முதல் உடலின் எல்லா பகுதிகளிலும் நச்சுக்கள் தேங்கும். அதில் மிக முக்கிய மான உறுப்பாக வாயை சொல்லலாம். அந்த வாயை எப்படி இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

நம்முடைய உடல் இயக்கத்துக்கு அடிப்படைத் தேவையான காற்று, உணவு, தண்ணீர் என முக்கியமான விஷயங்களை வாய் வழியே உடலுக்குள் செல்கின்றன. அதனால் உடலின் உள்ளுக்குள் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வாய் ஆரோககியம் குறைபாடும் முக்கியக் காரணம்.என்று சொல்லலாம். அந்த வாயை ஆரோக்கியமாகவும் நச்சுக்கள் இல்லாமலும் வைத்திருக்க இயற்கையான சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்வது வாய் ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியம். வாயில் தினமும் காலை பல் துலக்கியதும் ஆயில் புல்லிங் செய்து வர, வாய் ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். வாயில் ஊற்றி 2 நிமிடங்கள் வரை வைத்திருந்து, வாயைக் கொப்பளித்து விட்டு துப்ப வேண்டும். பிறகு வாயை கழுவிக் கொள்ளலாம்.

இது பற்களில் உள்ள அழுக்குகள் கிருமிகள், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை அழிக்கும். வாயை டீடாக்ஸ் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published.