ஆணையம் அறிவிப்பு
இட்லி ரூ. 17 புரோட்டா ரூ. 55, தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் ரூ. 750 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ” வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதைப்போல இட்லி ரூ. 17, புரோட்டா ரூ. 55 என மாவட்ட அளவில் உணவு பொருட்கள் செலவினத்திற்கான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது மாவட்டத்திற்கு மாவட்டம் மாற வாய்ப்புள்ளது” என்றார்.