திமுக – அதிமுக பெற்ற நிதி எவ்வளவு?

திமுக – அதிமுக பெற்ற நிதி எவ்வளவு?

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்கனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.

2019-20ம் ஆண்டில் திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ.45.5 கோடி கிடைத்துள்ளது. அதன்பிறகு 2020-21ம் ஆண்டில் ரூ.80 கோடி கிடைத்துள்ளது. அதன்பிறகு ஆளும் கட்சியாக திமுக மாறிய நிலையில் நன்கொடை அளவு கிடுகிடுவென அதிகரித்தது. 2021-2022ல் ரூ.306 கோடி, 2022-23ம் ஆண்டில் ரூ.285 கோடி, 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை ரூ.40 கோடி என மொத்தம் ரூ.656.5 கோடியை திமுக தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதேபோல் அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதிய விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுதவிர கோயம்புத்தூர் தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.