குஜராத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த 300க்கு அதிகமான மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர் . ஏ பிளாக்கில் உள்ள விடுதியில் மட்டும் வெளிநாடுகளை சேர்ந்த 75 மாணவர்கள் உள்ளனர்..
இங்கு ஆப்கானிஸ்தான் வங்கதேசம் உஷ்பெகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களை தங்கி படிக்கின்றனர் .
முஸ்லிம் மாணவர்கள் விடுதி வளாகத்திலேயே தொழுகை நடத்தியுள்ளனர். திடீரென விடுதிக்குள் நுழைந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் மாணவர்கள் ஐந்து பேர் காயம் அடைந்தனர் இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் துறைக்கு குஜராத் உள்துறை அமைச்சர் சால்வே உத்தரவிட்டார்.25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.