அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் – புதிய தரவுகள் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு

யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. இவற்றில் 2019-20ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை பாஜக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளது.

  • தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக ரூ.656.5 கோடி பெற்றுள்ளது.
  • நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ரூ.944.5 கோடி பெற்றுள்ளது,
  • ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.442.8 கோடி பெற்றுள்ளது.
  • சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 181.35 கோடி பெற்றுள்ளது.
  • மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1397 கோடி பெற்றுள்ளது.
  • கே சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1322 கோடி பெற்றுள்ளது.
  • சமாஜ்வாடி கட்சி ரூ.14.05 கோடி பெற்றுள்ளது.
  • அகாலிதளம் ரூ.7.26 கோடி பெற்றுள்ளது.
  • அதிமுக ரூ.6.05 கோடி பெற்றுள்ளது.
  • தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.