வெளியானது 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி மத்திய மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணத்தை ரொக்கமாக எடுத்துச்செல்லமுடியாது. அப்படி எடுத்துச்செல்லப்படும்போது முறையான ஆவணங்களை உடன் எடுத்துச்செல்லவேண்டியது கட்டாயமாகிறது.

மாநில அரசாங்கள் மற்றும் கலால் வரித்துறை சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் மட்டுமே இயங்க முடியும். இவை தவிர்த்து மாநில தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்டங்களும் வந்துவிடும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவர்.

திடீரென குறிப்பிட்ட இடங்களை சோதனை செய்வதற்கான பறக்கும் படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனத் தணிக்கையிலும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட இருக்கின்றனர்.

வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுகள், நலத்திட்டங்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.  மத்திய, மாநில அரசுகள் புதிய நிதியுதவித் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக் கூடாது. மத்திய, மாநில அமைச்சர்கள் புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட உத்தரவாதங்களை அளிக்கக் கூடாது. தேர்தல் பிரசாரம் தொடர்பான பணிக்கு அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பயன்படுத்தக் கூடாது. ஆளுங்கட்சியினர், அரசு விமானங்கள், தளவாடங்கள், வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published.