மக்கள் கடும் எதிர்ப்பு
தூத்துக்குடி வணிக வளாகத்தை ஒட்டி சாலையில் இருந்த வேம்பு, வாகை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களை வணிக வளாக உரிமையாளர் வெட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி வணிக வளாகத்தை ஒட்டி சாலையில் இருந்த வேம்பு, வாகை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களை வணிக வளாக உரிமையாளர் வெட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள மணிநகர் இரண்டாவது தெரு பகுதியில் சாலை ஓரங்களில் நிழல் தரக்கூடிய வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து அந்தப் பகுதி முழுவதும் படர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயில் கொடுமையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியும் மேலும் அந்தப் பகுதியில் இளைப்பாறியும் வந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் மங்களவேல் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது இந்த வணிக வளாகத்தை ஒட்டி இந்த மரங்கள் அமைந்துள்ளதால் மேலும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் மரங்களின் நிழலில் வாகனத்தை நிறுத்துவதால் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வேம்பு மற்றும் வாகை மரங்களை இன்று காலை வெட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எவ்வித அனுமதியும் இன்றி பொதுமக்கள் இருக்கக்கூடிய இந்த பகுதியின் சாலை ஓரத்தில் உள்ள மரங்களை நீங்கள் எப்படி வெட்டுகிறீர்கள் என்று வணிக வளாக உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் புகார் அளித்தனர். இதை எடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் மரங்கள் வெட்டுப்படுவது குறித்து விசாரித்துச் சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிழல் தரும் மரங்களை வெட்டிய வணிக வளாக உரிமையாளர்