பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக இறுதிக்கட்ட முயற்சி
பாமகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து சி.வி.சண்முகம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல். வடமாவட்டங்களில் 6, தென் மாவட்டங்களில் 1 தொகுதியை ஒதுக்க முடிவு. அதிமுக கூட்டணியே தேவை என பாமகவினர் ராமதாஸிடம் வலிவுறுத்தியுள்ளனர்.