பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
திய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு
புதிய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “PM SHRI SCHOOLS திட்டத்தில் கையெழுத்திடுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிக்கமிட்டி அமைக்கப்படும். புதிய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு. ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என ஒன்றிய அமைச்சரிடமே தெரிவித்து விட்டோம். தமிழகத்துக்கு என்ன தேவை என்பதறிந்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் .கல்வி மாணவச் செல்வங்களுக்கானது அதில் அரசியல் செய்யக்கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக திருச்சி மேலரண் சாலையில் ராசி மற்றும் சுமதி பப்ளிகேஷன்களில் இரண்டு மற்றும் மூன்றாவது விற்பனை நிலையத்தை இன்று (சனிக்கிழமை) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவர், “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களையும், சங்கத்தமிழ் இலக்கியங்களையும், நவீன இலக்கியங்களையும், அரிய நூல்களையும் பதிப்பித்து, அதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 340 நூல்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 600 நூல்களை பதிப்பிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.