வெளியே வந்தது பூனையல்ல, பூதம்: மதுரை எம்.பி
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக 6,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றதை, “சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல, பூதம்” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்களில் 22 நிறுவனங்கள். ஒவ்வொன்றும் தந்திருப்பது 100 கோடிக்கு மேல். அமலாக்கத் துறையிடம் சிக்கிய ஒரு நிறுவனத்திடம் இருந்து 1,368 கோடி பாஜக பெற்றுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றவர்களின் கணக்கு இது’ என விமர்சித்துள்ளார்