டெல்லியில் இன்று முக்கிய கூட்டம்!..
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் இன்று முக்கிய கூட்டம்!..
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் காலை நடக்கிறது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில், புதியதாக பொறுப்பேற்ற 2 தேர்தல் ஆணையர்கள், ஆணைய செயலர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக இன்று காலை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டு, தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.