மலாய் டிக்கா வீட்டிலேயே செய்யலாம்

INGREDIENTS

  •  சிக்கன்- 1/2 கிலோ
  •  தயிர்-50
  •  இஞ்சி, பூண்டு பேஸ்ட் -5 தேக்கரண்டி
  •  உப்பு- தேவையான அளவு
  •  எண்ணெய்- 100 மில்லி லிட்டர்
  •  பச்சை மிளகாய்-3

ஒரு பவுலில் தயிர் 50, இஞ்சி பூண்டு பேஸ்ட் 5 தேக்கரண்டி, மிளகு தூள் 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கியது, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடனே நறுக்கிய சீஸ் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதில் எலும்பு இல்லாத சிக்கன் 1/2 கிலோவை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பவுலில் நடுவில் ஒரு சின்ன கிண்ணத்தை வைத்து அதன் உள்பகுதியில் நெருப்பு கட்டையை சின்னதாக வைத்து கொள்ள வேண்டும். அதன் மேல் எண்ணெயை ஊற்ற வேண்டும். இந்த எண்ணெயை ஊற்றுவதன் மூலம் புகை வரும், இந்த நேரத்தில் அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். இதனை அப்படியே 45 நிமிடத்திற்கு இருக்க வேண்டும்.

அதன் பிறகு கிரில் பேன் அல்லது தோசை கல்லை அடுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். பிசைந்து வைத்துள்ள சிக்கனை கல்லில் சேர்த்து வேக வேண்டும், எண்ணெயை சிக்கன் மேலே மற்றும் கல்லின் கீழ் பகுதியில் சேர்த்து கொள்ள வேண்டும். சிக்கன் வெந்து இருபக்கமும் சிவந்த நிறம் வந்த பிறகு அடுப்பது அணைத்து விட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.