இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்

இரத்த அழுத்தம் குறைய சித்த மருத்துவம்: இன்று அனைவரும் இரத்த அழுத்தம், நோய் என்று கருதி மருந்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே சிந்திப்பது இல்லை. இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் இது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

அதிக உடல் உழைப்பின் போதும் மன அழுத்தத்தின் போதும் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இதய நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரத்த அழுத்தம். ஆம் அதிக இரத்த அழுத்தம் வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியாது என்பதால், இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

நடைப்பயிற்சி:

இந்த இரத்த அழுத்தம் குறைய தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.

இரத்த அழுத்தம் குறைய – எடை குறைதல்:

அதிக உடல் எடையும் கூட ரத்த அழுத்தம் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே உடல் எடையைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

எடை குறைக்கும் போது, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சரியான ரத்தப்போக்கிற்கு உதவும். இதன் மூலம், இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் பகுதிக்கு ரத்தம் சீராகப் பாய உதவும்.

Leave a Reply

Your email address will not be published.