விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரிய தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் – 2024ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2024, நாள் 09.02.2024 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழக்கப்பட்டுள்ளது.