வாழைக்காய் புட்டு

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

வாழைக்காயை நன்கு கழுவி ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும். பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். வாழைக்காயின் தோல் கருப்பாக மாறும்போது நடுவில் ஒரு கத்தியால் குத்திப் பார்த்தால் பூவாக இருக்கும். பின் தண்ணீரை முழுவதும் வடித்து ஒரு தட்டில் வைத்து ஆறவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பின் கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவும். வாழைக்காய் துருவலோடு தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கலந்து வைத்துள்ள வாழைக்காய் துருவலை சேர்த்து நன்கு மெதுவாக கலந்து இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.