வரதட்சணை கொடுமை கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
திருச்சி, மார்ச் 13: வரதட்சணையாக மேலும் பணம், நகை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி அய்யப்பநகர் நேரு தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (31). இவருக்கும் திருச்சி நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த அஞ்சலி தேவி என்பவருக்கும் கடந்த 11.2.22 அன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அஞ்சலி தேவியின் பெற்றோர் 28.5 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக நவீன் குமாருக்கு அளித்துள்ளனர். இந்நிலையில் நவீன் குமார் மேலும் பணம் மற்றும் நகை கேட்டு அஞ்சலி தேவியை கொடுமைபடுத்தியதாக தெரிகிறது.