தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு கூட்டம் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மண்டலத்துக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டுகளுக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மண்டலக்குழு தலைவர் உறுதியளித்தார். 2வது மண்டலத்தில் பல்வேறு வகையான பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு 20, 70, 120, 200 வாட்ஸ் திறன் கொண்ட புதிய எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
