பொதுமக்கள் சாலை மறியல்
அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
காவேரிப்பாக்கம் அருகே அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ்நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது அவளூர் பஸ்நிறுத்தம். இப்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொது மக்கள் விபத்துக்களளை தடுக்க, மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தாக கூறுகின்றனர்.