கல்லூரிகளில் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு
சித்தூர் மாநகராட்சி சார்பில் 18வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் படி கல்லூரிகளில் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சித்தூர் மாநகராட்சி சார்பில் 18 வயதில் நிரம்பியவர்கள் வாக்களிக்கும் படி சித்தூர் மாநகரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அருணா கூறியதாவது: இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் 18 வயதில் நிரம்பியவர்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.