‘ஈடி’ அதிகாரிகள் மீது காங். எம்எல்ஏ புகார்
அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசிக்கும் பர்ககான் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் வீடு மற்றும் மாநிலத்தின் பிற இடங்களில் நேற்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து எம்எல்ஏ அம்பா பிரசாத் கூறுகையில், ‘அமலாக்கத்துறையினர் எனது வீட்டில் சோதனை நடத்திய போது, என்னை ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தினர்.