இந்திய ஜனநாயகப் புலிகள் தலைவர் மன்சூர் அலிகான்
அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் பேச்சுவார்த்தை தொடர்கிறது எனவும் இந்திய ஜனநாயகப் புலிகள் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து வேறொரு பெரிய கட்சியுடன் ஆலோசித்து வருகிறோம், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலாவது போட்டியிட உறுதியுடன் இருக்கிறோம் என இந்திய ஜனநாயகப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன் துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது.