பிரண்டை சாதப்பொடி செய்முறை

பிரண்டையை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். இதயமும் எலும்பும் பலப்படும். ஈறுகளில் ஏற்படக்கூடிய ரத்தக் கசிவு நீங்கும். வாயு பிடிப்பு அகலும். இரத்தமூலம், வயிற்று வலி, ஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும். ஆஸ்துமா பாதிப்பு குறையும். மேலும் உடல் சுறுசுறுப்பாகவும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை நரம்புகளும் பலப்படும்

தேவையான பொருட்கள்

காய்ந்த பிரண்டை – 1 கப் துவரம் பருப்பு – 1 கப் பாசிப்பருப்பு – 1 கப் உடைத்த கடலை – 1/2 கப் வர மிளகாய் – 6 சீரகம் – 2 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் பூண்டு – 10 பல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பிரண்டையை கையில் எண்ணையை தடவிக்கொண்டு அதன் நாறுகளை நீக்கி பொடியாக நறுக்கி வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். இலைகள் கிடைக்கும் பட்சத்தில் அந்த இலைகளையும் சேர்த்து வெயிலில் காயவைத்து கொள்ளலாம். இரண்டிலிருந்து மூன்று நாட்கள் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக சிவந்த பிறகு பூண்டு எடுத்து ஒரு தட்டில் மாற்றிவிட்டு காய வைத்திருக்கும் பிரண்டையை அதே கடாயில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இதுவும் லேசாக சிவந்த பிறகு எடுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.