காவல் துறை ரோந்தை அதிகரிக்க வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க காவல் துறை ரோந்தை அதிகரிக்க வேண்டும்.
அரசுக்கு அதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை..
புதுவை மாநிலத்தில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தால் படிக்கும் மாணவர்கள்,இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
போதை பொருட்கள் இங்கொன்றும் அங்கொன்றும் கிடைக்க பெற்ற காலம் மாறி தற்போது சர்வ சாதரணமாக போதை பொருட்கள் நடமாட்டம் கிடைப்பது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது. சமீபத்தில் சிறுமி ஆர்த்தி மரணம் அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது.இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது.போதை வஸ்துக்கள் ஒழிக்க பட வேண்டும்.
அதுவும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை போதைக்கு அடிமை ஆக்க சட்ட விரோத கும்பல் சுற்றி வருகிறது.
இதனால் பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு சென்று தங்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று எண்ணி வந்த பெற்றோர் சொல்ல முடியாத துயரத்திலும் ஒருவித அச்ச உணர்விலும் இருந்து வருகின்றனர். நான் சட்டமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்த வரையில் கஞ்சா,போதை பொருட்கள்,கள்ள சாராயம் ஆகியவை தொகுதிக்குள் நுழைய விடவில்லை.ஆனால் தற்போது இவை அனைத்தும் மிக சுதந்திரமாக கிடைக்கும் நிலை உள்ளது.
சமீபத்தில் ஆளுநர் அளித்த பேட்டியில் போதை பொருட்கள் நடமாட்டம் கட்டுபடுத்த படும் என்று அறிவித்தார்.
ஆனால் தாய்மார்கள் பொதுமக்கள் எண்ணமெல்லாம் போதை பொருட்கள் முற்றிலுமாக புதுச்சேரியில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே.
இதனை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை ரோந்தை அதிகப்படுத்த வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..