காரசாரமான குடைமிளகாய் சட்னி செய்முறை
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் – 2 வரமிளகாய் – 5 கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1ஸ்பூன் வெங்காயம் – 1 புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை
முதலில் குடைமிளகாயை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல வெங்காயத்தையும் மீடியம் சைஸில் நறுக்கி விடுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.
அதன் பிறகு கடலை பருப்பு, வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இது தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு குடைமிளகாயும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி பிறகு தேங்காய் துருவல் கொச்சமல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள்.